மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு:கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் மீனாட்சி அம்மன் நகர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் நடேசன் (64). இவரது மனைவி வசந்த ராணி (62). இவர்கள் குடும்பத்துடன் 25 வருடங்களாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் திருமணமாகி மேடவாக்கத்தில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று (ஜூன் 25) காலை வழக்கம் போல் வசந்த ராணி அவர்களது வீட்டின் முன்புறம் உள்ள கிணற்றிலிருந்து பைப் மூலமாக தண்ணீர் எடுப்பதற்காக மோட்டார் ஸ்விட்சை ஆன் செய்துள்ளார். அப்போது ஸ்விட்ச் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து வசந்த ராணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சத்தம் கேட்டு சென்று பார்த்த அவரது கணவர் நடேசன் அதிர்ச்சடைந்து அங்கு கதறி அழுதுள்ளார். பின்னர் இது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் சென்று, வசந்த ராணியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு பைக் விபத்தில் இருவர் உயிரிழப்பு:சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து பல்வேறு தரப்பிலான மக்கள் விடுமுறை தினமான இன்று பொழுதை கழிப்பதற்காக மெரினா கடற்கரைக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் அவ்வையார் சிலை எதிரே உள்ள அவ்வை சண்முகம் சாலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றநபர் ஒருவர் கடற்கரைக்குச் செல்ல முற்பட்டபோது, காமராஜர் சாலையில் எழிலகத்தில் இருந்து சாந்தோம் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தின் மோதி மோதியுள்ளார்.
இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் சென்ற மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, பின்னால் வந்த கார் 23 வயது இளைஞர் மீது மோதியது. இந்த விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்போது, சிகிச்சையில் இருந்த மற்றொரு இளைஞரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அண்ணா நகர் சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு நட்சத்திர ஹோட்டல் லிப்டில் சிக்கி ஊழியர் மரணம்:ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் பிரபல சவீரா என்கிற தனியார் நட்சத்திர விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (27) என்பவர் கடந்த சில மாதங்களாக ரூம் சர்வீஸ் பாயாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அபிஷேக் இன்று (ஜூன் 25) விடுதியிலில் உள்ள ஏழாவது மற்றும் எட்டாவது மாடிகளுக்கு இடையே உள்ள சர்வீஸ் லிப்டில் சிக்கியுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுதியில் அதிகளவில் ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லாத நிலையில் அபிஷேக் லிப்டில் வெகுநேரமாக சிக்கிய நிலையில் அவர் உயிரிழந்தார். நீண்ட நேரத்திற்குப் பிறகு அங்கு வந்த சக ஊழியர்கள் லிப்டின் வெளியே அபிஷேக்கின் கால் மட்டும் தொங்கியபடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து அபிஷேக் உயிரிழந்ததை அறிந்த ஊழியர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ராயப்பேட்டை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் லிப்டில் சிக்கிய அபிஷேக்கை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
லிப்டில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு இதில் லிப்டின் உள்பகுதியில் தலை மார்பு பகுதியும், மற்ற உடல் பாகங்கள் வெளிப்பகுதியிலும் தொங்கியபடி உடல் துண்டான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனால் லிப்டை இயக்கி மீட்பதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து, லிப்டில் எவ்வாறு அபிஷேக் சிக்கி உயிரிழந்தார் என்பது குறித்தும் விடுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், விடுதியின் அறையில் தங்கியிருக்கும் நபர்களுக்கு இந்த சர்வீஸ் லிப்ட் வழியாக தேவையான பொருட்களை எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். அவ்வாறு, அபிஷேக் செல்லும் நேரத்தில் லிப்டின் கதவு சரியாக மூடாத நிலையில் அபிஷேக் உள்ளே சிக்கிக் கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும், காவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகே லிப்டில் எவ்வாறு சிக்கி அபிஷேக் உயிரிழந்தார் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு!