சென்னை: புதுவண்ணாரப்பேட்டை வா.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் பூபாலன் (29). இவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். வீட்டின் உரிமையாளரின் ஐந்து வயது மகளை கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் பூபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.