சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், பாத்திமா நகர், வெள்ளைச்சாமி தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது 3 வயது ஆண் குழந்தை கிஷோர், நேற்றிரவு வீட்டில் இருந்த ஆல் அவுட் கொசு மருந்தை தவறுதலாக அருந்தியுள்ளான்.
சிகிச்சை
இதனைக் கண்ட பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டான்.