தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போரட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். இதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “மே 7ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின் தடையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
மருத்துவர்களை நியமிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் - முத்தரசன் - press meet
சென்னை: உயிர்காக்கும் மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களை நியமிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
முத்தரசன்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்படாமல் மெத்தனமாக இருக்கும் தமிழ்நாடு அரசை வன்மையாக கண்டிக்கிறேன். உயிர்காக்கும் மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களை நியமிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.