சென்னை தி. நகர் ஜி.என். செட்டி சாலையில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவர் பின்னால் பைக்கில் வேகமாக வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், அப்பெண்ணிடமிருந்து நகையைப் பறிக்க முயற்சி செய்தனர்.
பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: பைக்கில் வந்த ஆசாமிகளைத் தேடும் காவல் துறை! - chain snatch cctv footage
சென்னை: பட்டப்பகலில் சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம், நகை பறிக்க முயன்ற கொள்ளையர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
![பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: பைக்கில் வந்த ஆசாமிகளைத் தேடும் காவல் துறை! சென்னை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10177127-thumbnail-3x2-fasf.jpg)
அதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அப்பெண்ணுக்கு சிறு காயம் ஏற்பட்டது. வழிப்பறி கொள்ளையனால் நகையைப் பறிக்க முடியவில்லை. இது குறித்து பாண்டிபஜார் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டிபஜார் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். நகை திருடுபோகாத காரணத்தால், அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இருப்பினும், கொள்ளையர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.