சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - கூடூர் மார்க்கத்தில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே நாளை (ஏப்.8) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் - சென்ட்ரல் ரயில் நிலையம் - கூடூர் ரயில் சேவை மாற்றம்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் - கூடூர் மார்க்கத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை (ஏப். 8) முதல் சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை
கீழ்கண்ட ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
- சென்னை சென்ட்ரலிலிருந்து 9:55 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் எளாவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
- சூலூர்பேட்டையிலிருந்து மதியம் 01:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சூலூர்பேட்டை - எளாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, எளாவூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
இதையும் படிங்க: பணம், பொருள்கள் பறிமுதல்; முதலிடத்தில் தமிழ்நாடு - தேர்தல் ஆணையம்...!