சென்னை பூக்கடை போக்குவரத்து உட்கோட்டத்தில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக சுரங்கப்பாதை கட்டுமானப்பணி சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மூலமாக நடைபெற உள்ளது. எனவே நாளை முதல் வரும் 25ஆம் தேதிவரை 15 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அண்ணா சாலையில் இருந்து பல்லவன் சாலை வழியாக இவிஆர் சாலை வருபவர்கள், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வருபவர்கள் அதே சாலையில் செல்லலாம்.
முத்துசாமி சாலையில் இருந்து அண்ணா சாலை செல்பவர்கள் முத்துசாமி பாலம், வாலாஜா பாயிண்ட் சென்று அண்ணா சாலையை அடையலாம்.
ஈவினிங் பஜார் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்பவர்கள் முத்துசாமி பாலம், வாலாஜா பாயிண்ட் சென்று அண்ணா சாலையை அடையலாம். ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்ல இயலாது.