திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சுற்றுவட்டார இடங்களில் தொடர்ச்சியாக செல்போன், செயின், பணம் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.
செங்குன்றத்தில் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த இருவர் கைது - சென்னை மாவட்ட செய்திகள்
திருவள்ளூர்: செங்குன்றத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிராண்ட்லைன் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்றை மடக்கியபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்ததால், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட சூர்யபிரகாஷ், ராஜசேகர் ஆகிய இருவரை கைது செய்த செங்குன்றம் காவல் துறையினர், அவர்கள் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.