தமிழ்நாடு

tamil nadu

அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த சுங்க அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை!

சென்னை : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சுங்கத் துறை அலுவலருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

By

Published : Nov 14, 2019, 11:45 PM IST

Published : Nov 14, 2019, 11:45 PM IST

court

சென்னை சுங்கத்துறையில் அலுவலராக பணியாற்றிய ஜெக்மோகன் மீனா என்பவர், 2007 – 2009 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 15 லட்சத்துக்கு மேல் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

ஜெக்மோகன் மீனா, அவரது மனைவி தர்மி மீனா, மகன் நிரஞ்சன் குமார் மீனா ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி விசாரித்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மூவரையும் குற்றவாளிகள் என அறிவித்து, சுங்கத்துறை அலுவலர் ஜெக்மோகன் மீனாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்ற இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார்.

மேலும், மூவருக்கும் சேர்த்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க : படையப்பா' ஸ்டைலில் பாம்புடன் டிக் டாக் - கடிவாங்கி துடித்த இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details