தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் படுகாயம்! - சென்னை அடையாறில் விபத்து

சென்னை : அடையாறில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வர் ஓமன தாமஸ் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக  கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியுள்ளது. அந்த கார் எதிரே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த தந்தை,மகன் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/20-September-2019/4501738_1050_4501738_1568987669677.png

By

Published : Sep 20, 2019, 8:41 PM IST

சென்னை அடையாறில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் முதல்வர் ஓமன தாமஸ் என்பவர் தனது காரில் பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியுள்ளது. அந்த கார் எதிரே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதியது.

விபத்தில் சிக்கிய கார், இருசக்கர வாகனம்

இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த, காய்கறி வியாபாரி முருகேசனும், அவரது மகனும் பலத்த காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details