தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்பேட்டில் அரசுப் பேருந்து மோதி வியாபாரி பலி! - கோயம்பேட்டில் அரசு பேருந்து மோதி வியாபாரி பலி

சென்னை:  மதுரவாயலில் தங்கி 100 அடி சாலையில் சர்பத் கடை நடத்திவருபவர் கடைக்கு ஆட்டோவில் ஐஸ் கட்டிகள் வந்ததால் அதனை எடுக்கச் சென்றபோது அரசுப் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானர்.

chennai Bus accident

By

Published : Sep 23, 2019, 2:47 PM IST

சென்னை கடலூரைச் சேர்ந்த முருகேசன் (48) மதுரவாயலில் தங்கி 100 அடி சாலையில் சர்பத் கடை நடத்திவந்தார். அவரது கடைக்கு லோடு ஆட்டோவில் ஐஸ் கட்டிகள் வந்ததால், அதனை எடுப்பதற்காக நேற்று முன்தினம் அவரது கடைக்குச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கிண்டி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அரசுப் பேருந்து மோதிய காட்சி

இதனையடுத்து கோயம்பேடு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முருகேசன் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் தீபன் என்பவரை கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details