சென்னை:சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தொடங்கிய புத்தகக் காட்சி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஏராளமான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
புத்தகக் காட்சியின் சிறப்புகள்:மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த புத்தகக் காட்சிக்கு ஒரு நாள் நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாக, மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த புத்தகக் காட்சி, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். தென்னிந்தியப் புத்த விஹார் அறக்கட்டளை, வாய்ஸ் ஆஃப் புத்தா, எழுச்சி பதிப்பகம், தடாகம், திருநங்கை, பிரஸ் LLP ஆகிய சிறப்பு வாய்ந்த அமைப்புகளுக்கும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய எண்ம உலகில், புத்தகம், வாசிப்பு என்பதெல்லாம் வியக்கத்தக்க விஷயம் என்றாலும். புத்தகங்களுக்கு என்று தனி வாசகர் பட்டாளம் இருப்பது உண்மை தான். குறிப்பாக சென்னை புத்தக் காட்சியில், வரலாற்று நாவல்கள், சுயசரிதைகள், கிளாசிக் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் அதிக அளவி விற்பனை ஆகிறன.
குறிப்பாக காலம் காலமாக மீள் பதிப்பில் இருக்கும் நூல்களான பொன்னியின் செல்வன், யவன ராணி, கடல் புறா, சேரமான் காதலி, சில நேரங்களில் சில மனிதர்கள், மார்க்சியம் நூல்கள் பொதுவுடமை போன்ற நூல்கள் அதிக அளவில் மக்களை ஈர்த்துக் கொண்டு இருக்கிறது.
முறையான வசதி இல்லை:சென்னை புத்தக காட்சிக்கு அதிக அளவு மக்கள் தினமும் வருகை புரிகின்றனர். இருப்பினும் அடிப்படை வசதிகள் முறையாக செய்யபடவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.இது குறித்து வாசகர்கள் கூறுகையில், "2023 புத்தகக் காட்சியில் அரங்குகளின் எண்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்த விதம், குறிப்பிட்ட அரங்கைத் தேடிச் செல்வதில் அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்தாண்டும் இதேப் போல் தான் உள்ளன.