தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கங்கண சூரிய கிரகணம்: வெறிச்சோடிய பிர்லா கோளரங்கம்

சென்னை: முழு ஊரடங்கு காரணமாக பிர்லா கோளரங்கம் மூடப்பட்டதால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாமல் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கங்கண சூரிய கிரகணம்: வெறிச்சோடிய பிர்லா கோளரங்கம்
கங்கண சூரிய கிரகணம்: வெறிச்சோடிய பிர்லா கோளரங்கம்

By

Published : Jun 21, 2020, 6:36 PM IST

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை சூரிய கிரகணம் நிகழ்வு நடந்தது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் கங்கண சூரிய கிரகணம் நிகழ்வு நடந்தது. மிக அரிதாக நடக்கும் இந்த நிகழ்வை வழக்கமாக சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் பிரத்யேக கண்ணாடிகள் மூலம் மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பார்வையிடுவார்கள். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படும்.

ஆனால் சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் வரும் 31ஆம் தேதிவரை பிர்லா கோளரங்கம் மூடப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் நிகழ்வு நாளான இன்றும் பிர்லா கோளரங்கம் திறக்கப்படவில்லை. இதனால் எந்தவிதமான பரபரப்புமின்றி பிர்லா கோளரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது.

வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்றும், அதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக கண்ணாடிகள் மூலம் மட்டுமே பார்க்க வேண்டும் என அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக கடைகளில் இதற்கென்று பிரத்யேக கண்ணாடிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் முழு அடைப்பு காரணமாக கடைகளும் திறக்கப்படவில்லை.

இதனால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பிறகு 2031ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதிதான் இதுபோன்ற ஒரு சூரிய கிரகணத்தை பார்க்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கிரகணத்தை பாதுகாப்பாய் பார்ப்போம்!

ABOUT THE AUTHOR

...view details