தமிழ்நாடு

tamil nadu

அரசு மருத்துவமனையில் 15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு!

By

Published : Jul 11, 2021, 3:38 PM IST

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 40 நாள்களில் 15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai bike theft
chennai bike theft

சென்னை : திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவர் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 8 மாத கர்ப்பிணியான தன் மனைவியை சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனம் பார்க்கிங் செய்யும் இடத்தில் பார்க்கிங் செய்துவிட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிகிச்சை முடித்துவிட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, குரோம்பேட்டை காவல் நிலைத்தில் ரமேஷ் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரிப்பதாக மட்டுமே சொல்லி ரமேஷை திருப்பி அனுப்பியுள்ளனர்.

15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு

இதேபோன்று 40 நாள்களில் 15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் காணாமல் போயிருப்பதாக அம்மருத்துவமனையின் டீன் கூறியுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற திருட்டுகள் ஏற்படுவதற்கு, பார்க்கிங் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபடாததே காரணம் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை

இனி இதுபோன்று நிகழாமல் இருக்க அரசு மருத்துவமனை நிர்வாகம் பார்க்கிங் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க:

சென்னையில் கத்தியுடன் சுற்றிவந்த 4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details