தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக் ரேஸில் கெத்து காட்ட வந்த புள்ளிங்கோ! - கொத்தாகத் தூக்கிய போலீஸ் - Two wheeler race in Chennai

சென்னை: கிண்டியிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய ஜிஎஸ்டி சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 21 நபர்களின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

chennai
chennai

By

Published : Dec 25, 2019, 12:46 PM IST

Updated : Dec 25, 2019, 4:14 PM IST

கிண்டியிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய ஜிஎஸ்டி சாலையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, காவல் துறையினர் அந்தப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விமான நிலையம் எதிரே உள்ள ஜிஎஸ்டி சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்தது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 40 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ரேஸில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு ரேஸ் பைக்குகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும், அதே நேரத்தில் அவர்கள் இரவு நேரங்களில் எங்கு செல்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும், பெற்றோர்கள் ஒத்துழைத்தால் மட்டுமே பைக் ரேஸை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்று போலீசார் தரப்பில் வேதனையுடன் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ‘பைக்கில் மின்னல் வேகம்’ - இரவில் செல்போன் திருடும் கும்பல்; 6 பேர் கைது!

Last Updated : Dec 25, 2019, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details