இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கரோனா வைரஸால் மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய நோய்த்தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"தமிழ்நாட்டில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 40இல் இருந்து 41ஆக உயர்ந்துள்ளது. கரோனா சிகிச்சைக்கான மருத்துவக் கட்டமைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கரோனா சிகிச்சைக்காக 17 ஆயிரம் படுக்கைகள் வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.