சென்னை: பரங்கிமலை பகுதியில் பொறியியல் பணி காரணமாக, கடற்கரை தாம்பரம் இடைய நாளை (அக்.31) பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யபட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரத்து செய்யப்படும் கடற்கரை- தாம்பரம் வழி மின்சார ரயில்:அதில், "நாளை(அக்-31) காலை 10.18, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, நண்பகல் 12.00, 12.10, 12.30, 12.50, மதியம் 1.15, 1.30, 2.00 மற்றும் பிற்பகல் 2.45 ஆகிய நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து, தாம்பரம் - கடற்கரை இடைய காலை 9.08, 9.50, 10.30, 10.40, 11.00, முற்பகல் 11.10, 11.30, 11.40, நண்பகல் 12.05, 12.35, மதியம் 1.00, 1.30, 1.40, 2.05, பிற்பகல் 2.20, 2.50, 2.57, 3.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே, நாளை (அக்-31) காலை 10.56, முற்பகல் 11.40, நண்பகல் 12.20, 12.40, மதியம் 1.45, பிற்பகல் 2.15, 2.30 ஆகிய நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. தொடர்ந்து, செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு நாளை காலை 11.00, முற்பகல் 11.30, நண்பகல் 12.00, மதியம் 1.00, 1.45, பிற்பகல் 2.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. ரத்து செய்யப்படும் ரயில்களுக்கு பதிலாக, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன" என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து
கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்: தாம்பரம் மற்றும் கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை நாளை (அக்-31) 10:18 மணி முதல் 14:45 மணி வரை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும், பயணிகளின் வசதிக்காவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
நீல வழித்தடம் (Blue line):விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் . அதேப்போல், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
பச்சை வழித்தடம்(Green line): அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் முதல் புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் விமான நிலையம் மெட்ரோ வரை (கோயம்பேடு வழியாக) காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்" என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ராமேஸ்வரம் - காசிக்கு 300 நபர்கள் ஆன்மிக சுற்றுலா.. அரசு சார்பில் ஏற்பாடு என அமைச்சர் தகவல்.. யார் யார் விண்ணப்பிக்கலாம்?