தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை அதிகரித்துவரும் நிலையில் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இதனால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
2,000 ஆதரவற்றவர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கும் தொண்டு நிறுவனங்கள் - chennai based Charities help homeless people
சென்னை: அரிமா சங்கம், டீக்கடை நண்பர்கள் என்னும் இரு தொண்டு நிறுவனங்கள் சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுமார் இரண்டாயிரம் ஆதரவற்ற மக்களுக்கு தினமும் உணவு வழங்கிவருகின்றன.
ஆதரவற்றவர்களுக்கு தினமும் உணவு தொண்டு நிறுவனங்கள்
இதனால் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்குச் சிரமமின்றி பசியாற்றிவருகின்றனர். இதுபோன்ற தொண்டு நிறுவனங்கள் அரசு அமல்படுத்தியுள்ள முழு ஊரடங்கு முடியும்வரை தங்களால் இயன்ற அளவு ஆதரவற்றவர்களுக்கு தொடர்ந்து உணவுகளை வழங்க வேண்டும் என இந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க:தடுப்பூசிக்காக குவிந்த மக்கள்: அரசு மருத்துவமனையில் தொற்று பரவும் இடர்