சென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் யூகோ வங்கியில் இன்று(பிப்.25) காலை, திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், வங்கி ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.
பின்னர் அங்கு வந்த திருவொற்றியூர், தண்டையார்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கியில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.