உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள சாலைப் பாதுகாப்புத் திட்டங்கள், மருத்துவமனைகளை மத்திய சாலைப் போக்குவரத்து, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொடங்கிவைத்தார்.
இதில், முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், முக்கிய அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகனங்கள், சிசிடிவிகள், மது சோதனை கருவிகள் உள்ளிட்டவற்றை நிதின் கட்கரி தொடங்கிவைத்தார்.
பின்னர் விழா மேடையில் பேசிய நிதின் கட்கரி, "சாலைப் பாதுகாப்பில் தமிழ்நாடு மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் கூறிவருகிறேன். இதனை அனைத்து முதலமைச்சர்களிடம் கூறிவருகிறேன். தமிழ்நாட்டிடமிருந்து மற்ற மாநிலங்கள் கற்க வேண்டும். தமிழ்நாடு போக்குவரத்து அலுவலர்கள், காவலர்களுக்கு நன்றி. அடுத்த முறை சென்னை வரும்போது சாலை விபத்தில்லா சென்னையாக இருக்க வேண்டும்.