சென்னை ஆவடி அடுத்த அய்யப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டில், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக ஆவடி காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்திக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து திருமுல்லைவாயல் காவல் துறை ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தபோது, குட்கா பொருள்கள் மூட்டை மூட்டையாகப் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஒரு டன் எடையுள்ள ரூ.7 லட்சம் மதிப்பிலான குட்காவை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், நடத்திய விசாரணையில், சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த முருகேசன் (45) என்பவர் குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு வாங்கி குடும்பத்துடன் ஆரம்பத்தில் வசித்துவந்துள்ளார்.