தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வில்லிவாக்கம் அருகே ரவுடிகள் நடமாட்டம் அதிகரிப்பு: போலீசார் குவிப்பு! - அயப்பாக்கம் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில் வெளியூர் ரவுடிகள் வேட்பாளர்களை மிரட்டுவதாக வந்த புகாரை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

chennai ayapakkam due to goons threatening police security beefed up
தேர்தலை முன்னிட்டு அயப்பாக்கத்தில் ரவுடிகள் நடமாட்டத்தால் போலீஸ் குவிப்பு

By

Published : Dec 30, 2019, 12:37 PM IST

சென்னை அருகே உள்ள அயப்பாக்கம் ஊராட்சியில் 15 வார்டுகள், 36 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டது. இந்நிலையில், தேர்தல் பரப்புரை முடிந்த பின்னரும் வெளியூரில் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் அயப்பாக்கம் முழுவதும் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து, மாவட்ட காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்த திமுக மாவட்டச் செயலாளர் சா.மு. நாசர், அயப்பாக்கம் ஊராட்சியில் சுற்றித்திரியும் ரவுடிகள் ஆயுதங்களைக் காட்டி பொதுமக்கள், வேட்பாளர்கள் இடையே பீதியை ஏற்படுத்துகின்றனர்.

தேர்தலை முன்னிட்டு அயப்பாக்கத்தில் ரவுடிகள் நடமாட்டத்தால் போலீஸ் குவிப்பு

அவர்களைக் கைது செய்து தேர்தலை அமைதியாக நடைபெற பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: காவலர் காலில் விழுந்த திமுக முன்னாள் அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details