சென்னை அமைந்தகரை திருவீதி அம்மன் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (40). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி குழந்தைகள் கோடை விடுமுறையொட்டி சொந்த ஊர் திருவண்ணாமலைக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், சுந்தர் மட்டும் வீட்டில் தனியாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர், சுந்தரின் நெற்றி, காது, தலை ஆகிய பகுதிகளில் வெட்டி விட்டு தப்பிவிட்டார்.
தூங்கிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு! - ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை
சென்னை: வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக அரிவாளில் வெட்டி தப்பியோடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூங்கிகொண்டிருந்த நபருக்கு அறிவாள் வெட்டு
இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு 108 ஆம்பலன்ஸ் உதவியோடு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.