சென்னை திருவிக நகர் பகுதியில் வசித்து வருபவர் ஹரிபாபு(24).இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெரவள்ளூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி சென்றுள்ளார். அப்போது சாலையில் நடந்த சென்ற 11 வயது சிறுமியை பார்த்தவுடன் ஆட்டோவை நிறுத்திவிட்டு சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து சிறுமியை ஆட்டோவில் ஏற்றி செல்ல முற்பட்டுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - போக்சோ சட்டதில் ஆட்டோ ஓட்டுனர் கைது - Chennai Latest News
சென்னை: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
![சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - போக்சோ சட்டதில் ஆட்டோ ஓட்டுனர் கைது Chennai Auto driver arrested posco act](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:04:21:1594971261-tn-che-02-pocso-arrest-script-7202290-17072020124507-1707f-1594970107-965.jpg)
Chennai Auto driver arrested posco act
ஆனால் சிறுமி ஹரிபாபுவின் கையை கடித்துவிட்டு தப்பித்து வந்து வீட்டில் பெற்றோரிடம் நடந்ததை பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனே சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுனர் ஹரிபாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.