தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம் மையங்களில் நூதன திருட்டு - கூண்டோடு சிக்கிய கொள்ளையர்! - Crime news

சென்னையில் ஏடிஎம் மையத்துக்கு வந்த முதியவரிடம் நூதன திருட்டில் ஈடுபட்டவரை தேனியில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏடிஎம் மையங்களில் நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது!
ஏடிஎம் மையங்களில் நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது!

By

Published : Feb 23, 2023, 8:53 AM IST

சென்னை:ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (56) என்பவர் பணம் எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவருக்கு உதவுவதுபோல் நடித்து அவரது ஏடிஎம் கார்டை வாங்கி பணம் எடுத்து உரியவரிடம் கொடுத்துள்ளார். அதேநேரம் உண்மையான ஏடிஎம் கார்டுக்கு பதிலாக, தான் வைத்திருந்த போலி ஏடிஎம் கார்டை அந்நபர் முதியவரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் அப்துல்லாவின் செல்போனுக்கு சிறிது சிறிதாக 1.95 லட்சம் ரூபாய் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷேக் அப்துல்லா, வங்கிக்குச் சென்று இது குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர் கையில் வைத்திருந்தது போலி ஏடிஎம் கார்டு என்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக ஷேக் அப்துல்லா, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் பழைய குற்றவாளியான தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த தம்பிராஜ் என்பவர் இந்த நூதன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் தேனிக்குச் சென்ற தனிப்படை காவல் துறையினர், நூதன திருட்டில் ஈடுபட்ட தம்பிராஜை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கைது செய்யப்பட்ட தம்பிராஜ், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதேபோன்று ஏடிஎம் மையங்களுக்குச் சென்றும், அங்கு வரும் ஏடிஎம் இயந்திரத்தை சரியாக கையாளத் தெரியாத நபர்களை குறிவைத்து, உதவுவது போல் நடித்து, ஏடிஎம் கார்டை வாங்கிக் கொண்டு போலி ஏடிஎம் கார்டை கொடுத்து பணத் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் சமீபத்தில் மதுரையில் இதேபோன்ற வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற தம்பிராஜ் வெளியே வந்து மீண்டும் இதுபோன்று மோசடிகளில் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.

இதையும் படிங்க:ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முடியாததால் ஆத்திரம்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details