தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாட்டியைக் கொன்று நகையை கொள்ளையடித்த பேரன் உள்ளிட்ட இருவர் கைது! - chennai youngster murderd grandma

சென்னை: ஆவடி அருகே பணம் கொடுக்க மறுத்த பாட்டியை  கொன்ற பேரனையும் அவரது நண்பரையும் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

chennai-at-avadi-youngster-arrested-for-murdering-his-grandma-for-jewels
பாட்டியைக் கொன்று நகையை கொள்ளையடித்த பேரன் கைது!

By

Published : Feb 12, 2020, 11:00 AM IST

சென்னை ஆவடி அடுத்த கண்ணப்பாளையம், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான பார்த்தசாரதி

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி மல்லிகா (56) தனது கணவரின் ஓய்வூதிய பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மதியம் அதே பகுதியில் வசிக்கும் மல்லிகாவின் தங்கை இந்திராவின் மகள் மீனாட்சி அவரைக் காண வந்துள்ளார். அப்போது மல்லிகா வீட்டு சமையலறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவரது காது, மூக்கில் இருந்து தங்க நகைகள் காணமல் போயிருந்தன. மேலும் பீரோவில் இருந்த நகை, பணமும் திருடு போயிருந்தன.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மல்லிகாவை கொலை செய்தது அவரது சகோதரியின் பேரன் கொளத்தூர், ரெட்டேரியைச் சேர்ந்த கோகுல் (19). அவரது கூட்டாளியான அயனாவரத்தைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஆகியோர் என தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து இருவரையும் பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ஆவடி காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உயிரிழந்த மல்லிகாவின் மூத்த சகோதரி பத்மா என்பவரின் மகள் வயிற்று பேரனான கோகுல் கொளத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோகுல் தங்களின் குடும்ப செலவுக்காக அவ்வப்பபோது பாட்டி மல்லிகாவிடம் பணம் பெற்று செல்வது வழக்கம். கடந்த சில நாள்களுக்கு முன்பு கோகுல் குடும்பத்தினர் வேறு ஒரு வாடகை வீட்டிற்கு குடிபோக இருந்ததால் அதற்கான அட்வான்ஸ் தொகையான ரூ.20 ஆயிரத்தை பாட்டி மல்லிகாவிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

பாட்டியைக் கொன்று நகையை கொள்ளையடித்த பேரன் கைது!

இதனால் பாட்டி மல்லிகாவை கொன்று நகைகளை கொள்ளை அடிக்க முடிவு செய்து அவரின் நண்பர் உதவியோடு கடந்த 6ஆம் தேதி இரவு மல்லிகா வீட்டின் பின்புறமாக வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்கி கொலை செய்து அவரது காது, மூக்கில் இருந்த நகைகளை இருவருமாக எடுத்துள்ளனர்.

மேலும் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்து சென்றனர். அதனையடுத்து காவல்துறையினர் கோகுல் மறைத்து வைத்திருந்த சுமார் ஏழு சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் குற்றவாளி சரண்

ABOUT THE AUTHOR

...view details