சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கை விவாத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் பொன்ராஜ் திமுக ஆட்சிகாலத்தில் டீசல் மானியம் வழங்காதது குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக சட்டப்பேரவௌ உறுப்பினர் செங்குட்டுவன், அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் உள்ள கடனை சுட்டிக்காட்டி பேசினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறையில் கடன் என்பது இரண்டு ஆட்சி காலத்திலும் இருந்ததாக குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜியால் வெடித்த சர்ச்சை! - senthil balaji
சென்னை: செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது திமுகவையும் கருணாநிதியையும் விமர்சித்து பேசிய கருத்துக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசியதால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
மேலும், தற்போது திமுகவில் உள்ள செந்தில் பாலாஜி, அதிமுகவில் இருந்த போது, தமிழ்நாட்டை பிச்சைப் பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி, அட்சயப் பாத்திரமாக மாற்றியவர் ஜெயலலிதா என சட்டப்பேரவையில் குறிப்பிட்டு பேசியதை சுட்டிக்காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
கடும் அமளிக்கு மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்தபோது திமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜிதான் தற்போது திமுகவிற்கு சென்றிருக்கிறார். அதனால் திமுகவினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகதான், செந்தில்பாலாஜி பேசியதை சுட்டிக்காட்டியுள்ளனர் என விளக்கம் அளித்தார்.