சென்னை: முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்2023 ) இன்றும் நாளையும் நடக்கிறது என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழக பொதுநுழைவுத்தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு மார்ச் 25ந் தேதி நடைபெறுகிறது.
இதையும் படிங்க:மோடி கருத்து விவகாரம் - பாட்னா நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு விசாரணை - ராகுலை துரத்தும் வழக்குகள்?
CEETA, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க்,எம்.பிளான் ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 750 ரூபாயும், இதரபிரிவினருக்கு 1500 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கு கலந்தாய்வு கட்டணமும் இதில் அடங்கும். இவர்களுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 26 ந் தேதி நடைபெறுகிறது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து,
மாணவர்கள் கட்டணங்களை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.