சென்னை அண்ணாசாலையில், அண்ணா சிலைக்கு கீழே அமைந்துள்ள அண்ணா சுரங்கப்பாதை மாநகரத்திலேயே பெரிய சுரங்கப்பாதையில் ஒன்றாகும்.
அண்ணா சுரங்கப்பாதை புதுப்பிப்பு!
சென்னை: அண்ணாசாலையில் உள்ள அண்ணா சுரங்கப்பாதை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த அண்ணாசாலை, வாலஜா சாலை, எல்லீஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் இருந்துவரும் பாதசாரிகளை இணைக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலின் அரசினர் தோட்டம் ரயில் நிலையத்தை இணைக்கும் இந்த சுரங்கப்பாதை மெட்ரோ கட்டுமானத்துக்கு ஏற்ப தரையில் கிரைனைட் கற்கள் பதிக்கப்பட்டு, சுவரில் டைல்ஸ் ஒட்டப்பட்டு, புதிய விளக்குகள் பொருத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, காதி பவன் உள்ளிட்ட முக்கிய இடங்களையும் இந்தச் சுரங்கம் இணைக்கிறது. இதன்மூலம் மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் எளிதாக பயணிக்க முடியும்.