அறிஞர் அண்ணாவின் 102ஆவது பிறந்தநாளை முன்னிட்டு2010ஆம் ஆண்டு செப்.15ஆம் தேதிமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக இது போற்றப்படுகிறது. பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட பல லட்சம் நூல்களைக் கொண்டிருக்கும் இந்த நூலகம் பயிற்சித் தேர்வு, மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வாசகத்தலமாக இயங்கி வருகிறது.
தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழ்நாடு அரசு பாதுகாத்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டாலின் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
நூலகத்தை பார்வையிட்ட ஸ்டாலின் இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணாநிதியால் உருவாக்கப்பட்ட 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்' உறுப்பினர் சேர்க்கை தொடங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனையடுத்து, இன்று காலை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் என்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டேன்' என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், 'மாணவர்களின் அறிவுத் தேடலுக்குப் பெரிதும் பயனளிக்கும் 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தை', அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்காமல், இனியாவது தொடர்ந்து நல்ல முறையில் பராமரித்திடவும், படிக்க வரும் மாணவ, மாணவியர்கள் குறைகளை களைந்திடவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்!' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை