தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை, திருச்சி கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை! - பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

corona precaution
கரோனா

By

Published : Jul 31, 2021, 9:32 PM IST

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் முக்கிய கோயில்களில் வரும் 9ஆம் தேதி வரையில் பக்தர்களின் நேரடி தரிசனத்திற்கு தடை விதித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் வட பழனி முருகன் கோயில், கந்தகோட்டம் கந்தசாமி கோயில், சூளை அங்காள பரமேஸ்வரி கோயில், பாடி படவேட்டம்மன் கோயில், அம்மன் கோயில்களில் பக்தர்கள் நேரடி தரிசனம்செய்ய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில்களில் நடைபெறும் கிருத்திகை நிகழ்வுகளில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, திருச்சி மாவட்டத்திலும் ஶ்ரீரங்கம், திருவானைக்காவல், வெக்காளியம்மன், மலைக்கோட்டை கோயில்களிலும் பக்தர்களின் நேரடி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மதுரை: ஆடிக்கிருத்திகை நிகழ்வுகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை

ABOUT THE AUTHOR

...view details