சென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.சில மாவட்டங்களில் கன மழை பெய்வதையும், குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மிக கனமழை பெய்வதையும் காணமுடிகிறது.
முன்னதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், நாகப்பட்டினம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெய்துவரும் கனமழை தொடரும் என்றும், அப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்திருந்தது. அதனை அடுத்து அப்பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும், டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க:கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. ஆட்சியர் வெளியிட்ட அப்டேட்!