தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கிலும் உணவு வழங்கும் அம்மா உணவகம் - மக்களின் பசியை போக்க செயல்படும் அம்மா உணவகம்

சென்னை: வெளியூர்களிலிருந்து சென்னையில் வந்து தங்கியிருக்கும் மக்களுக்காக ஊரடங்கு உத்தரவிலும் அம்மா உணவகம் இயங்கிவருகிறது.

amma unavakam
amma unavakam

By

Published : Mar 22, 2020, 2:19 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி மக்களிடம் வேண்டுகோள்விடுத்தார். அதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

அரசு சார்பில் தமிழ்நாட்டில், பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் சேவை ஆகியவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கியச் சந்தையான கோயம்பேடு சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆனால், மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் மக்கள் நலன் கருதி அம்மா உணவகம் செயல்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். அதனடிப்படையில், வெளிமாநிலங்கள், வெளியூர்களிலிருந்தும் சென்னைக்கு வந்து தங்கியிருக்கும் மக்களின் பசியைப் போக்க அம்மா உணவகம் செயல்பட்டுவருகிறது.

அம்மா உணவகங்களில் வழக்கம்போல் பொதுமக்களுக்கு காலை, இரவில் டிபன், மதியம் சாப்பாடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் இலவசமாக இன்று உணவு வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மக்களின் பசியைப் போக்கும் அம்மா உணவகம்

அம்மா உணவகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கூறுகையில், "கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாங்களும் பங்கு பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்னர். சென்னையில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு உள்ள நிலையில் அம்மா உணவகம் திறந்து செயல்படுவதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க:கரோனா: வாசலில் விளக்கேற்றி வழிபாடு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details