சென்னை: வி.என். சுதாகரன் பெயரிலான நற்பணி மன்றத்தின் மாநில அமைப்பாளராக இருந்த கோபி ஸ்ரீதரன் என்பவரிடம் கடந்த 2001ஆம் ஆண்டு பணம் கேட்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக வி.என்.சுதாகரன் உள்பட 4 பேர் மீது சென்னை பாண்டிபஜார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்பின், இந்த வழக்கில் வி.என்.சுதாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் வி.என்.சுதாகரன் உள்பட 4 பேர் மீது சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் சுதாகரன், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டதால் இந்த வழக்கு விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 2021 அன்று சுதாகரனுக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.