சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பன்னாட்டு விமான சேவை மட்டும் சென்னையிலிருந்து இன்னும் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது.
இருந்த போதிலும், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துவர, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தவிர, உள்நாட்டு விமான சேவையும் கடந்த சில நாள்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
இதில், உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை, 14 நாள்கள் கட்டாயம் தனிமைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களைத் தனிமைப்படுத்துவதற்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்த, முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த விமான நிலைய காவலர் ஒருவருக்கு மூச்சுத் திணறல், காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.