தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வரவேற்பு

ஜெர்மன் மூனீசசிலிருந்து நேஷனல் ஏர்லைன்ஸின் பி744 ரக மிகப்பெரிய விமானத்திற்கு இரு புறமும் நீர்பாய்ச்சி சென்னை விமான நிலைய அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர்.

நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு சிறப்பு வரவேற்பு
நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு சிறப்பு வரவேற்பு

By

Published : Feb 26, 2021, 10:32 PM IST

ஜெர்மன் மூனீசசிலிருந்து நேஷனல் ஏர்லைன்ஸின் பி744 ரக மிகப்பெரிய விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது விமான நிலைய அலுவலர்கள் விமானத்தின் மீது இரு புறமும் நீர்பாய்ச்சி வரவேற்பு அளித்தனர்.

இந்த மிகப்பெரிய விமானம் மூலம் சுமார் 101 டன் எடைகொண்ட சரக்குகள் சென்னை வந்தடைந்தது.

நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு சிறப்பு வரவேற்பு

அதேபோல் இந்த விமானம் திரும்பி செல்லும் போது 94 டன் எடை கொண்ட சரக்குகள் அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் இந்தச் சரக்கு விமான சேவை வாரத்திற்கு ஒரு முறை மூனீசசிலிருந்து சென்னை இடையே இயங்கும் என விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஜெர்மன் சரக்கு விமான சேவையை நீண்ட தூரம் விரிவாக்கம் செய்வதற்கு, சென்னை விமான நிலைய ஆணையம் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளது. இது போன்ற மிகப் பெரிய விமானங்கள் சென்னை வருவது ஐந்தாவது முறையாகும்.

இதையும் படிங்க: மதுரை விமான நிலையத்திற்கு அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை- மக்களவை உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details