சென்னை விமான நிலைய ஆணையக இயக்குநர் தீபக்கை பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் சந்தித்து, ‘சென்னை விமான நிலையத்தில் மீண்டும் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராநர், பன்னாட்டு முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா ஆகியோர் பெயர்களை சூட்டப்பட வேண்டும். உள்நாட்டு, பன்னாட்டு முனையங்களில் இரு தலைவர்களின் புகைப்படங்களையும் வைக்க வேண்டும். விமானத்தில் பெருந்தலைவர் காமராசர் உள்நாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் என்று அறிவிப்பு செய்யப்பட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.
தலைவர்களின் முழு உருவ சிலைகளையும் முனையங்கள் முன் வைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனுவை வழங்கினார். இதுகுறித்து டெல்லியில் உள்ள ஆணையகத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய இயக்குநர் உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த என்.ஆர். தனபாலன், ‘சென்னை விமான நிலையம் 1986ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு திறப்பு விழாவில் பிரதமராக இருந்த வி.பி. சிங்கிடம் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரை சூட்ட வேண்டும் என்று அப்போதைய முதலமைச்சர் வைத்த கோரிக்கையை ஏற்று, வி.பி. சிங் செயல்படுத்தினார். சென்ற ஐந்து ஆண்டுகளாக புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதாகக் கூறி காமராசர், அண்ணா படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன.