தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் ஐபோன், 2 கிலோ தங்கம் பறிமுதல்! - விமான நிலையம் கடத்தல் செய்தி

சென்னை: சிங்கப்பூர், துபாய், கொழும்பு உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்குக் கடத்திவந்த இரண்டு கிலோ தங்கம், 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கரன்சி நோட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2 kg gold
சென்னை விமான நிலையத்தில் ஐ-போன், 2 கிலோ தங்கம் பறிமுதல்!

By

Published : Feb 13, 2020, 9:07 AM IST

சென்னை விமான நிலையத்திற்குப் பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்ததையடுத்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராசக்காளி (34) என்பவரைச் சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அலுவலர்கள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக அவர் பேசியதால் உடமைகளைச் சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருப்பதைக் கண்டனர். அவரிடமிருந்து ரூ. 17 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள 424 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

தொடர்ந்து துபாயிலிருந்து திருவனந்தபுரம் வழியாக வந்த விமானத்தில் பயணம்செய்த பீகாரைச் சேர்ந்த தீரஞ் குமார் (34) என்பவரிடம் நடத்திய சோதனையில் ரூ. 38 லட்சம் மதிப்புள்ள 908 கிராம் தங்கத்தை அலுவலர்கள் கைப்பற்றினர்.

மேலும் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம்செய்த சிங்கப்பூரைச் சேர்ந்த தேவி (40) என்பவர் நாப்கினில் ரூ. 12 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள 294 கிராம் தங்கத்தை மறைத்துவைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல் சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ரவி (40) என்பவரிடமிருந்து ரூ. 12 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள 307 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த விமானத்தில் பயணம்செய்ய வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அஜீஸ் கிப்லி (25) என்பவரின் உடமைகளைச் சோதனை செய்தபோது ரூ. 7 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள சவூதி ரியால்களை மறைத்துவைத்துக் கடத்திச்செல்ல முயன்றதைக் கண்டுபிடித்துக் கைப்பற்றினர்.

ஐபோன், வெளிநாட்டு கரன்சிகள்

அதைத் தொடர்ந்து சென்னைக்கு துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம்செய்த ஆந்திரா நெல்லூரைச் சேர்ந்த பசீர் சையத் (24) என்பவரின் உடமைகளிலிருந்து ரூ. 24 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள 27 ஐபோன்கள், 16 ஐபேடுகள், இரண்டு டிவிக்கள், இரண்டு வாட்ச்கள் ஆகியவற்றையும் அலுவலர்கள் கைப்பற்றினர்.

சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

இதையும் படிங்க:'அயன்' பட பாணியில் தங்கம் கடத்தல்: ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details