சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 5ஆவது தெருவில் வசித்து வந்தவர் செல்வம்(48). ஓட்டுநராக பணியாற்றி வந்த அவர், நேற்றிரவு
(ஜூலை 10) அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
ரத்தவெள்ளத்தில் கிடந்த செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.