தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரோஜாவுக்கு கால் வலி: சென்னை மருத்துவமனையில் அனுமதி! - சென்னை மருத்துவமனை

பிரபல திரைப்பட நடிகையும், ஆந்திரா மாநில அமைச்சருமான ரோஜா சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 10, 2023, 10:13 PM IST

சென்னை:நேற்றிரவு (09.06.2023) சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்த ரோஜா, திடீரென கால் வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கால் வீக்கத்திற்காக அவருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? என்று மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தற்போது கால் வீக்கம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தான் ரோஜாவுக்கு இரண்டு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதற்கிடையே, அவருக்கு மீண்டும் கால் வீக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், நடிகை ரோஜா விரைவில் குணமடைந்து நலம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அண்மைக்காலமாக, அரசியலில் தீவிர ஈடுபட்டு வரும் நடிகை ரோஜா தனது உடல்நலம் பற்றி கவலைப்படாமல் இருப்பது அவரது ரசிகர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது. ஆந்திராவில் அமைச்சராக இருந்தாலும், தமிழ்நாட்டு மருமகளான இவர் சென்னையில் தான் தனது குடும்பத்திற்கான நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: NCP: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரானர் சுப்ரியா சுலே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், நடிகை ரோஜா. ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்தவர். அதன்பிறகு இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஆந்திர அரசியலில் இணைந்து பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். சந்திரபாபு நாயுடுவின் 'தெலுங்கு தேசம் கட்சி'-யில் தனது அரசியல் வாழ்க்கையை துவங்கிய இவர், தற்போது ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.

ஆரம்ப காலங்களில் ரஜினியுடன் இவர் இணைந்து நடித்த வீரா படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சரத்குமார் உடன் சூரியன், விஜயகாந்த் உடன் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே தெலுங்கு படங்களிலும் நடித்து வந்துள்ளார். ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு ஆர்.கே.செல்வமணி மீது காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தையும் உள்ளனர். சமீபத்தில் இவர்களது மகள் சினிமாவில் நடிக்க போகிறார் என்ற தகவல் பரவியது. இதற்கு இவர்கள் மறுப்பு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Nayanthara: திருமண நாளில் உருகிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி

ABOUT THE AUTHOR

...view details