சென்னை, போரூரை அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில் உள்ள புதர் மண்டிக் கிடந்த காலியிடம் ஒன்றில், இளைஞர் ஒருவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாங்காடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு இளைஞர் ஒருவர், இரண்டு கைகளும் பின்னால் கட்டப்பட்டும், கால்கள் கட்டப்பட்டும் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்டு கிடந்த நபர், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசூரியா (வயது 20), என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.