தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் கேபிள் உருளையில் சிக்கிய நாய் உயிருடன் மீட்பு! - dog rescued in cable roll

சென்னை: மின் கேபிள் உருளையில் சிக்கிய நாய் ஒன்றை உயிருடன் போராடி மீட்ட தீயணைப்பு துறையினரை மக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.

dog
dog

By

Published : Sep 22, 2020, 4:02 PM IST

சென்னை கோயம்பேடு காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள காலி மைதானத்தில் மெட்ரோ பணிக்கு உண்டான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றித்திரிந்த நாய் ஒன்று அங்கு வைக்கப்பட்டுள்ள மின் கேபிள் உருளையில் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென்று நாயின் தலை உருளையின் துவாரத்தில் சிக்கியுள்ளது.

கேபிள் உருளையில் சிக்கிய நாய்
நாயின் அலறல் சத்தம் கேட்டு காவலர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் கோயம்பேடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் ஐந்து நபர்கள் உருளையில் சிக்கி கொண்ட நாயின் தலைப்பகுதியை விடுவிக்க கடப்பாரையைக் கொண்டு முயற்சி செய்தனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி நாயின் தலைப்பகுதியை விடுவித்து உயிருடன் மீட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் கோயம்பேடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினரை வெகுவாக பாராட்டிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details