சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கத்திலிருந்த தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த பொன். தங்கவேலு என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
நீர் நிலைகளை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு - chennai city news
சென்னை: ஈஞ்சம்பாக்கத்தில் காணாமல்போன 27 நீர்நிலைகளை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த மனுவில், நீர்நிலைகளை அதன் பழைய நிலைக்கே மீட்டெடுக்க வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இந்நிலையில், நீர்நிலைகளை கண்டறிந்து பாதுகாக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், காணாமல்போன நீர்நிலைகளை கண்டறிய நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமணி, நீதிபதி எம். துரைசாமி அடங்கிய அமர்வு, இந்த வழக்கு குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.