இதுகுறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 22 புற்றுநோயாளிகள், 15 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள், இரண்டு எச்ஐவி நோயாளிகள், இரண்டு கல்லீரல் செயலிழப்பு நோயாளிகள் கரோனா தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஏற்கனவே, இதுபோன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்குக் கூடுதல் கவனத்துடன் பல்துறை வல்லுநர்களும் பங்களிப்புடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா தொற்று ஏற்பட்ட 22 புற்றுநோயாளிகளில் இருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
வாய், தொண்டை, கழுத்து பகுதி புற்றுநோய் ஏற்பட்டவர்கள் 13 பேர், மலக்குடல் புற்றுநோய் ஒருவர், கர்ப்பப்பை புற்றுநோய் இரண்டு பேர், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டு பேர், தொண்டையில் புற்றுநோய் ஒருவர், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று பேர்.