தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிமராமத்து பணி: தூர்வாரப்படும் செம்பரபாக்கம் ஏரி! - செம்பரபாக்கம் ஏரி

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.

chembarapakkam river

By

Published : Sep 11, 2019, 7:25 PM IST

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரியை தூர் வாரி ஆழப்படுத்த வேண்டும், நீரின் கொள்ளளவை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், ஏரியை தூர்வார தமிழ்நாடு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை தூர் வாரும் பணிக்கான பூமி பூஜை இன்று தொடங்கியது.

இதில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி ஆகியோர் பங்கேற்று பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் பொன்னையா கூறுகையில், செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவான 3,645 மில்லியன் கன அடி நீரை மீட்டெடுக்கும் வகையில் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள 2,551 ஹெக்டேர் பரப்பளவில் தூர் வாரும் பணியின் மூலம் 536 மில்லியன் கன அடி நீரை மீட்டெடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details