சென்னை விமான நிலையத்தில் சிறுத்தையின் பற்கள் பறிமுதல்
துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்சலில் சிறுத்தையின் பற்கள், நகங்கள் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது.
துபாயிலிருந்து இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றபின்பு விமானம் மீண்டும் துபாய் புறப்பட தயாரானது. அதற்கு முன்னதாக விமான நிலைய ஊழியா்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனா். அப்போது விமானத்தின் ஒரு சீட்டிற்கு அடியில் ஒரு சிறிய பாா்சல் இருந்ததை கண்டுப்பிடித்தனர்.
இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவா்கள் விரைந்து வந்து அந்த பாா்சலை பரிசோதித்தனா். பின்பு அதை திறந்து பாா்த்தபோது, அதனுள் சிறுத்தை புலியின் பற்கள் 3 இருந்தன. அதோடு சிறுத்தையின் நகங்கள், எலும்பு துண்டுகள் அடங்கிய தூள்களும் இருந்தன. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் சுங்கத்துறைக்கு தகவல் கொடுத்தனா். அவா்கள் ஆய்வு செய்துவிட்டு,சென்னையில் உள்ள வனவிலங்குகள் குற்றத்தடுப்பு பிரிவுக்கு தெரிவித்தனா். அவா்கள் வந்து சிறுத்தையின் பற்கள், நகம், எலும்புத் தூள்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அதோடு தாம்பரத்தில் உள்ள வனவிலங்குகள் ஆராய்ச்சி மையத்திற்கு அதை அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.