தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (30). இவர், தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர் மூலமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநரான அல்ஜியானி (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர், ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகர் பணி வாங்கி தருவதாகவும், அதற்கு 8 லட்ச ரூபாய் வரை செலவாகும் என கார்த்திக்கிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய கார்த்திக் சென்னை பெரியமேடு ஈவிஆர் சாலையில் உள்ள பாவா லாட்ஜில் வைத்து, 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை அல்ஜியானிவிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் குறிப்பிட்ட தேதியில் பணி வாங்கி தராததால் சந்தேகமடைந்த அவர் விசாரித்து பார்த்த போது தான் ஏமாந்தது தெரியவந்துள்ளது.
ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பள்ளி ஆசிரியரிடம் மோசடி! - பள்ளி ஆசிரியரிடம் மோசடி
சென்னை: ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பள்ளி ஆசிரியரிடம் 7.40 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
![ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பள்ளி ஆசிரியரிடம் மோசடி! கைது செய்யப்பட்ட நபர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-man-arrested-for-job-cheating-1208newsroom-1597229716-1004.jpg)
கைது செய்யப்பட்ட நபர்
இதன் காரணமாக, ஆகஸ்ட் 7ஆம் தேதி கார்த்திக் அல்ஜியானி மீது பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அல்ஜியானியை தேடி வந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட்.11) திருவள்ளூரில் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 6 லட்சத்து 30ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதே போல் வேறு யாரிடமும் மோசடி செய்துள்ளாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.