தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த ரவுடி கைது!

சென்னை: போலி ஆவணங்கள் தயாரித்து ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை அபகரிக்க முயன்ற ரவுடியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

மோசடி செய்த ரவுடி கைது
மோசடி செய்த ரவுடி கைது

By

Published : Sep 4, 2020, 7:24 PM IST

சென்னை மண்ணடி பவளக்கார பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் ஐந்து கோடி மதிப்பில் காலி இடம் உள்ளது. இதை, 2012ஆம் ஆண்டு அஸிசுல் கரீம் என்பவருக்கு மாத வாடகைக்கு கிருபாகரன் கொடுத்தார். சில மாதங்கள் மட்டும் அஸிசுல் கரீம் சரியான முறையில் வாடகை பணம் கொடுத்தார். பின்னர் அந்த இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளார்.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கிருபாகரன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக இருந்த அஸிசுல் கரீமை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று (செப்.4) அஸிசுல் கரீமை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அஸிசுல் கரீம் ரவுடி என்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் அஸிசுல் கரீம் பல்வேறு நபர்களை மிரட்டி போலியான ஆவணங்கள் தயாரித்து சொத்துக்களை பறித்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அஸிசுல் கரீமை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ரவுடி தலைமறைவு: தண்டோரா மூலம் காவல் துறை எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details