தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டி பணம் பறித்தவர் கைது!

சென்னை: அமைந்தகரையில் தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டி பணம் பறித்து வந்த நந்தகுமார் என்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

By

Published : Jun 22, 2019, 7:02 PM IST

CHEATING

சென்னை மைலாப்பூரைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (57), அமைந்தகரை மேத்தா நகரில் பல்பொருள் நிறுவனம் நடத்திவருகிறார். இவரிடம் அச்சக தொழிலாளர் நலச்சங்கம் என்ற சங்கத்தை ஏற்படுத்தி, அதன் தலைவராக இருந்துவரும் சென்னை சூளைமேடு அப்துல்லா தெருவைச் சேர்ந்த நந்தகுமார் (52) என்பவர் தொழிலாளர்களை துன்புறுத்தி வருவதாகக் கூறி அஷ்ரப் அலியிடம் ரூ.50,000 பணத்தை மிரட்டி வாங்கி உள்ளார்.

ஊழியர்களை மிரட்டி பணம் பறித்த நபர் கைது
இது குறித்து அஷ்ரப் அலி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நந்தகுமாரை கைது செய்து விசாரணை செய்ததில், மிரட்டி பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டார்.

மேலும், பல தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் சென்று உங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை கொடுமைப்படுத்தியுள்ளதாகக் கூறி, அதனால் தங்கள் மீது வழக்கு தொடுக்கப்போவதாக மிரட்டி லட்சக்கணக்கில் நந்தகோபால் பணம் வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், 2014ஆம் ஆண்டு நந்தகுமார் மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் இதே போல் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details