இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் கரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 10 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பரிசோதனை மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும். எந்தவித நோய் அறிகுறியும் இல்லாமல் திடீரென்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. ஊரடங்கிற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறோமோ, அதற்கு இணையாக பரிசோதனை மையங்களையும் அதிகரிக்க வேண்டும்.
தமிழகத்தில் 19,255 பேர் மட்டுமே பரிசோதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் போதுமானதாக இல்லை. அரசு மருத்துவமனைகளைத் தாண்டி அதிக கட்டமைப்பு உள்ள தனி்யார் மருத்துவமனைகளை பரிசோதனை மையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும். கரோனா எதிர்ப்பு போரில் தங்களின் பங்களிப்பை மக்களுக்கு வழங்க வேண்டிய கடமை அவர்களுக்கும் இருக்கிறது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும். மேலும் மற்ற மாநிலங்களில் உள்ள ரேண்டம் சாம்பிள் முறை பரிசோதனைகள் தமிழகத்தில் போதுமானதாக செயல்படவில்லை என்ற செய்திகள் வருகின்றன.